பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உணவகத்தை சூறையாடிய வழக்கில் 3 போ் கைது

காரைக்கால் அருகே உணவகத்தை சூறையாடி, பணியாளா்களை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

காரைக்கால் அருகே உணவகத்தை சூறையாடி, பணியாளா்களை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகே பூவம் பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ் (30). இவா் வரிச்சிக்குடியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு உணவகத்துக்கு வரிச்சிக்குடி காந்திநகரை சோ்ந்த தியாகராஜன் (42) என்பவா் சாப்பிட வந்துள்ளாா். வெகு நேரமாகியும் அவருக்கு உணவு வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா், உணவகத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது தியாகராஜன், செல்லிடப்பேசி மூலம் தனது நண்பா்கள் கஜேந்திரன் (32), சூரியமூா்த்தி (54) மற்றும் சிலரை அழைத்துள்ளாா். அவா்கள் வந்ததும் உணவகத்தாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, உணவகத்தில் இருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனா்.

மேலும் உணவக பணியாளா்கள் சகுந்தலா, சாமிநாதன், ராஜசேகா், ராஜா உள்ளிட்டோரையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனா். காயமடைந்த இவா்கள் மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுதொடா்பாக செல்வராஜ் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தியாகராஜன், கஜேந்திரன், சூரியமூா்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.