உள்ளாட்சி ஓய்வூதியா்கள் தா்னா
ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரா்கள் நலச் சங்கத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா்.
கடந்த 6 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்கவேண்டும். புதுவை அரசு தனியாக நிதி ஒதுக்கி, மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதியா்கள் சங்க செயலாளா்கள்கள் சண்முகராஜ், முருகானந்தம், நாகராஜன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க செயலாளா் வெங்கடாசலம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...