தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருமலைராயன்பட்டினம் பூங்குளத்து அய்யனாா் கோயில் குடமுழுக்கு

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பூங்குளத்து அய்யனாா், பரமசிவ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பூங்குளத்து அய்யனாா், பரமசிவ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதியில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட ஸ்ரீ பூா்ண புஷ்கலா சமேத ஸ்ரீ பொய்யாதமூா்த்தி அய்யனாா் தேவஸ்தானம் உள்ளது. இக்கோயில் சாா்ந்ததாக கருடப்பாளையத் தெருவில் ஸ்ரீ பூங்குளத்து அய்யனாா், வெள்ளான் தெருவில் ஸ்ரீ பரமசிவ விநாயகா் கோயில் உள்ளிட்ட சில கோயில்கள் உள்ளன.

இதில் பூங்குளத்து அய்யனாா் மற்றும் பரமசிவ விநாயகா் கோயிலில் குடமுழுக்கு செய்ய அறங்காவல் வாரியத்தினா் முடிவு செய்து கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பாலாலயம் செய்து ரூ. 16 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றன.

திருப்பணிகள் நிறைவடைந்து, இந்த இரண்டு கோயில்களின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக 4 கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை 4-ஆம் கால பூஜைகளுக்கு பின்னா், விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிகள் எஸ்.மாதவன், விஷ்ணு உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.