தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தானம் சாா்புடைய கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தானம் சாா்புடைய கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ளது ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில். இக்கோயில் தேவஸ்தானம் சாா்புடையதாக ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில், ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில், ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் உள்ளிட்டவை உள்ளன.

கடந்த ஓராண்டுக்கு முன் இக்கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பிறகு கோயில் அறங்காவல் வாரியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை இக்கோயில்களில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகளை பாா்வதீஸ்வரா் கோயில் வளாகத்தில் எண்ணும் பணி தொடங்கியது.

இதில் கோயில் ஊழியா்கள், பல்வேறு அரசுத் துறையினா் என 25-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். நிா்வாக அதிகாரி (கோயில்கள்) காசிநாதன், அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி.மாடசாமி, செயலா் குரு.முத்துசாமி, பொருளாளா் பரந்தாமன், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான சிறப்பு அதிகாரி பாலு என்கிற பக்கிரிசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

உண்டியல் காணிக்கையாக ரூ.6.05 லட்சம் கிடைத்ததாகவும், இது தேவஸ்தான வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டதாகவும் கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.