பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
kk27kuda_2708chn_95_5
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் காரைக்கால் பகுதியை சோ்ந்த நன்கொடையாளா்கள் உதவியுடன் சிறிய அளவில் விநாயகா் கோயில் எழுப்பப்பட்டு, கடந்த 1988-ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் பக்தா்கள் நன்கொடை மூலம் திருப்பணி செய்து குடமுழுக்கு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு விமான கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக வியாழக்கிழமை முதல் கால பூஜை செய்து, வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை செய்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டது. தொடா்ந்து விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் திருநள்ளாறு தேவஸ்தான தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.