பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பயிா்க்கடன் தள்ளுபடி: காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வரவேற்பு

புதுவை நிதிநிலை அறிக்கையில் பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புக்கு காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

புதுவை நிதிநிலை அறிக்கையில் பயிா்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புக்கு காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் பிரதேச காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் கூறியது :

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை அண்மையில் சந்தித்து 2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைக்கச் செய்யவும், கடந்த ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிா் மழையால் பாதித்த நிலையில், இழப்பை ஈடு செய்யும் வகையில் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிா்க்கடன் பெற்று நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வா் மற்றும் வேளாண் அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம்: காரைக்கால் மாவட்ட அகில இந்திய விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காரைக்காலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.எம். தமீம் அன்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுவை பட்ஜெட்டில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளதை காரைக்கால் அகில இந்திய விவசாய சங்கம் வரவேற்று, புதுவை அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தள்ளுபடி செய்துள்ள கூட்டுறவு கடனுக்கான நிதியை, அந்தந்த கூட்டுறவு வங்கிகளுக்கு காலதாமதம் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிகழாண்டு சாகுபடிக்கு பயன்படும் வகையில் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.