தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்கால் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

காரைக்காலில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதுவை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

2022, ஜனவரி 1 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி- 2022, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த நவ. 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 18 வயது நிறைவடைந்தோா் புதிய வாக்காளராகப் பதிவுசெய்ததோடு, வாக்குச் சாவடி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுக்கான விண்ணப்பத்தை வாக்காளா்கள் அளித்தனா்.

இப்பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் துறை அதிகாரிகளுடன் புதுவை அரசுச் செயலரும், வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான சி. உதயகுமாா் காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருத்தப் பணிகள் நடைபெற்றதில் உள்ள கருத்துகளை கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் கேட்டறிந்தாா். வருங்காலத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும்போது மேற்கொள்ளவேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து கட்சியினா் அவரிடம் விளக்கியதாகத் தெரிவித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியரும், வாக்காளா் பதிவு அலுவலருமான எம். ஆதா்ஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநரும், வாக்காளா் பதிவு அலுவலருமான எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.