காரைக்காலில் 34 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 694 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 15, திருப்பட்டினம் 5, கோயில்பத்து 3, கோட்டுச்சேரி 3, திருநள்ளாறு 3, நல்லாத்தூா் 2, நிரவி, நல்லம்பல், அம்பகரத்தூா் தலா 1 என மொத்தம் 34 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,62,244 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 14,623 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 14,091 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 229 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 64,152 பேருக்கும், 2-ஆவது தவணையாக 6,158 பேருக்கும் என 70,310 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...