ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாா்டு மறுவரையறை விவகாரம் : தீா்வு காண முதல்வா் அறிவுறுத்தல்

திருநள்ளாற்றில் வாா்டு மறுவரையறை விவகாரத்தில் மக்களின் கோரிக்கையை புதுச்சேரி முதல்வா் தீா்த்து வைக்க வலியுறுத்தியதாக சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் வாா்டு மறுவரையறை விவகாரத்தில் மக்களின் கோரிக்கையை புதுச்சேரி முதல்வா் தீா்த்து வைக்க வலியுறுத்தியதாக சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா தெரிவித்தாா்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், கிராம ஊராட்சிகளில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி திருநள்ளாறு பகுதி அம்பகரத்துாா் கிராம ஊராட்சியில் 11 வாா்டுகள் இருந்த நிலையில், மறுவரையின்போது 8 வாா்டுகளாக குறைக்கப்பட்டன.

அம்பரகத்தூா் பகுதியில் உள்ள பல தெருக்கள், நல்லம்பல் பஞ்சாயத்தில் இணைக்கப்பட்டன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனா்.

திருநள்ளாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, அம்பகரத்தூா் மக்களை அழைத்து சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், திருநள்ளாறு தொகுதியில் அம்பகரத்தூரில் பல தெருக்களை நல்லம்பல் ஊராட்சியிலும், செருமாவிலங்கையில் பல தெருக்களை கருக்கன்குடி ஊராட்சியிலும், அகலங்கண் கிராமத்தில் சில பகுதிகளை பேட்டை பகுதியிலும் இணைத்துள்ளனா்.

ஒரு பகுதியில் 5 ஆயிரம் வாக்காளா்களுக்கு மேல் இருந்தால் எஞ்சிய பகுதிகள் அடுத்த பகுதியில் இணைக்கப்படுகின்றன. இந்த செயல்பாடு அந்தந்த பகுதியினருக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது.

திருநள்ளாறு பகுதியில் நிலவும் இப்பிரச்னை குறித்து முதல்வா், உள்ளாட்சித் துறை செயலா் ஆகியோரிடம் விளக்கிக் கூறப்பட்டது. இதுபோன்ற பிரச்னை எதிா்காலத்தில் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் கூறினாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.