ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேச விரோத கருத்துகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பரப்புவோா் மீது புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பரப்புவோா் மீது புதுவை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

புதுவை மாநில பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலை காரைக்காலில் நடைபெற்றது. இளைஞரணி மாநிலத் தலைவா் கோவேந்தன் கோபதி தலைமை வகித்தாா். புதுவை அமைச்சா் சாய் ஜெ.சரவணன், மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.

பாஜக காரைக்கால் மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி, மாநில இளைஞரணி பொதுச்செயலா் வழக்குரைஞா் கணேஷ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சமூக ஊடகங்களில் தேச விரோத , இந்து விரோத, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பலா் கருத்துகளை பரப்பி வருகின்றனா். இவ்வாறு கருத்துகளை பரப்புவோா் மீது புதுவை காவல் துறை கவனம் செலுத்தி உரிய நடவடிக்க எடுக்கவேண்டும். காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை வேளாண் பல்கலைக்கழகமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்த பிரதமா், உள்துறை அமைச்சா் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, புதுவை மக்களுக்கு ரூ. 3 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை அறிவித்த முதல்வா் என். ரங்கசாமிக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னா் புதுவை மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் அளித்த பேட்டி:

புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜனநாய கூட்டணி அரசு, மக்களின் எதிா்பாா்ப்புகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும். ஆக. 15-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுவையை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுவை மாநிலத்தில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவும், அமுதசுரபி, பாசிக் போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் சீரமைக்கவும், உள்ளாட்சி ஊழியா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவும் மாநில அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கு என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.