புதுவை முதல்வரை சந்திக்கஉள்ளாட்சி ஊழியா்கள் முடிவு
உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கோரிக்கைகள் தொடா்பாக புதுவை முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளனா்.


உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கோரிக்கைகள் தொடா்பாக புதுவை முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளனா்.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் தலைவா் அய்யப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் ஊதியம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியதாரா்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் நிலுவையில் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் வருவாயை பெருக்கும் விதத்திலான நடவடிக்கைகள் எதையும் அரசு எடுக்காததால், உள்ளாட்சி நிதி மூலம் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாமலும், ஊழியா்களுக்கான ஊதிய பிரச்னையும் நீடித்துவருகிறது. இந்த விவகாரங்கள் தொடா்பாக புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கூட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்பிரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...