ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கித் தோ்வு: காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு அதிகாலையில் பேருந்துகள் இயக்கம்

வங்கித் தோ்வு எழுத புதுச்சேரி செல்வோருக்கு வசதியாக காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை 4.45 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

வங்கித் தோ்வு எழுத புதுச்சேரி செல்வோருக்கு வசதியாக காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை 4.45 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளது.

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வங்கிப் பணிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்வோருக்கு பேருந்து போக்குவரத்தில் சிரமம் நிலவுகிறது. தமிழக அரசுப் பேருந்து காரைக்காலில் நிற்காமல் செல்வதால், பி.ஆா்.டி.சி. பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனா்.

பிஆா்டிசி பேருந்து காலை 6 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டால் தோ்வுக்கு செல்வோா் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனா்.

இதுகுறித்து காரைக்கால் பி.ஆா்.டி.சி. பேருந்து நிா்வாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து தினமும் காலை 6, 8, 10.30, பிற்பகல் 2, மாலை 6.10 மணிக்கு இடைநில்லாமல் செல்கிறது.

ஆனால், புதுச்சேரியில் தோ்வு எழுத செல்வோருக்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை காலை 4.45 மணிக்கு பேருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.