பிளஸ் 1 மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தேதி மாற்றம்
காரைக்கால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


காரைக்கால் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்காக முதல்கட்டமாக தரவரிசைப் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு, 14 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி, சோ்க்கைக்கான ஆணை தரப்பட்டது.
தொடா்ந்து, அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டு, 21 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால், கலந்தாய்வு 22 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல, தனியாா் பள்ளி மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 22 ஆம் தேதி வெளியிடப்பட்டு, 23 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் மாற்றம் செய்யப்பட்டு, 23 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 26 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...