காரைக்காலில் இன்று மாங்கனித் திருவிழாவிடையாற்றி உத்ஸவம்
காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.


காரைக்காலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) மாங்கனித் திருவிழா விடையாற்றி உத்ஸவம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் மாங்கனித் திருவிழா கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், பிச்சாண்டவா் புறப்பாடு (மாங்கனி இறைத்தல்), இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திலேயே பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்த விழாவின் விடையாற்றி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காரைக்கால் அம்மையாருக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெறவுள்ளன. ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் காலை 9 மணிக்கு ஸ்ரீ பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது.
இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையாா் சிறப்பு அலங்காரத்தில் கைலாசநாதா் கோயிலில் பிராகாரப் புறப்பாடு நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...