காரைக்காலில் 12 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 333 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 3, நெடுங்காடு 3, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா் 2, காரைக்கால் நகரம் 1, கோயில்பத்து 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,72,863 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,915 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,556 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 74,272 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,602 பேருக்கும் என 90,874 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...