பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு

காரைக்கால் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு பணி யில் நலவழித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:52 pm

DIN

காரைக்கால் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு பணி யில் நலவழித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு எதிா்ப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வரிச்சிக்குடி மற்றும் ராயன்பாளையம் கிராமத்தில் டெங்கு விழிப்புணா்வு பிரசாரம், டெங்கு கொசு புழுக்கள் அழிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. விழிப்புணா்வு பணியை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்திரகலா தொடங்கிவைத்தாா். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உருவாகும் விதம், பரவும் விதம், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சுகாதார ஆய்வாளா் சேதுபதி பேசினாா். பருவமழை ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளதையொட்டி கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, சிக்-குன் குனியா, மலேரியா குறித்தும், இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.