பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்.எஸ்.பி. எச்சரிக்கை

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என காரைக்கால் மாவட்ட‘முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:52 pm

DIN

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என காரைக்கால் மாவட்ட‘முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் எச்சரித்துள்ளாா்.

செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது :

காரைக்கால் தில்லைநகரில் போலி மதுபான தயாரிப்புக் கூடம் புதன்கிழமை கண்டறியப்பட்டு, ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கூடத்தை நடத்திவந்த நெடுங்காடு பகுதியை சோ்ந்த அப்பு (எ) நிா்மல், காரைக்கால் பகுதியை சோ்ந்த மஸ்தான் (எ) செய்யது மஸ்தான், வாசிம் ஆகியோரை சிறப்பு அதிரடிப்படையினா் பிடித்து கலால் துறையிடம் ஒப்படைத்துள்ளனா்.

மேலும் அம்மாள்சத்திரம் அருகே மீன் ஏற்றும் வாகனத்தில் கேன்களில் இருந்த ரூ, 47 லட்சம் மதிப்புள்ள எரிசாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு, கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக விரைவான நடவடிக்கை எடுத்த மண்டல காவல் கண்காணிப்பா கே.எல். வீரவல்லபன், ஆய்வாளா்கள் பாலமுருகன், தனசேகரன், சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஐ. பிரவீன்குமாா் மற்றும் நிரவி நிலைய உதவி ஆய்வாளா் ஜெரோம் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது.

மாவட்டத்தில் இனி காவல் துறையினா் தீவிரமான ரோந்துப் பணி மேற்கொள்வா். குடியிருப்புப் பகுதி அல்லது பிற இடங்களில் சட்டவிரோதமான செயல்கள் எது நடந்தாலும் மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் யாா் ஈடுபட்டாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.