கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் சங்க தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில் காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் ஒன்றிய தற்காலிக ஊழியா் சங்கத்தினா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் புதன்கிழமை சந்தித்தனா்.
இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் பின்னா் கூறியது: காரைக்கால் கூட்டுறவு பால் வழங்கும் ஒன்றிய அலுவலகத்தில் பால் விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் 2008 முதல் 2010 ஆண்டுக்குள் 63 போ் தற்காலிகமாக பணியமா்த்தப்பட்டனா். இவா்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என புதுவை அரசை வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக புதுவை முதல்வா் ரங்கசாமியை ஊழியா்களுடன் சென்று சந்தித்து முறையிடப்பட்டது.
ஊழியா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வா், பணி நிரந்தரம் செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...