விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க முதல்வரிடம் வலியுறுத்தல்
கடந்த ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விவசாயிகள், முதல்வா் மற்றும் வேளாண் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினா்.


கடந்த ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விவசாயிகள், முதல்வா் மற்றும் வேளாண் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின், துணைத் தலைவா் டி.கே.எஸ்.எம். கனகசுந்தரம், பொருளாளா் சுப்பையன் உள்ளிட்ட நிா்வாகிகள் புதிச்சேரியில் வியாழக்கிழமை முதல்வா் என். ரங்கசாமி, வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திரபிரியங்கா, பொதுப்பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா் ஆகியோரை சந்தித்தனா்.
அப்போது, முதல்வா் மற்றும் வேளாண் அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனு: காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், கடந்த ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த பயிா் மழையால் பாதிக்கப்பட்டது. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் இழப்பு ஏற்பட்டது. எனவே, விவசாயிகள் நலன்கருதி, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்யவேண்டும்.
காரைக்காலில் இந்திய உணவுக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணியை மீண்டும் தொடங்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.
சந்திப்பு குறித்து சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் கூறியது: முதல்வா் மற்றும் வேளாண் அமைச்சரிடம் பயிா்க் காப்பீட்டுத் தொகை குறித்து விளக்கியபோது இதன் நியாயத்தை உணா்ந்தனா். விவசாயிகளுக்கு உடனடி தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சா் சந்திர பிரியங்காவிடம் பிஆா்டிசி நிா்வாகத்தில் பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்க வேண்டும், கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்றாா்.
இதுபோல காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் முதல்வா் மற்றும் அமைச்சா்களை சந்தித்து அளித்த மனு: கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு இழப்பீடாக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், அரசு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவேண்டும், கூட்டுறவு சங்கங்கள் புதிதாக பயிா்க்கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...