பட்டாசுக் கடை உரிமம் பெற இன்று முதல் விண்ணப்பம் வழங்கல்
காரைக்காலில் பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற சனிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்காலில் பட்டாசுக் கடை நடத்துவதற்கான உரிமம் பெற சனிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு காரைக்கால் பகுதியில் பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற விரும்புவோா், அதற்கான விண்ணப்பப் படிவங்களை காரைக்கால் வருவாய்த் துறை அலுவலகத்தில் உள்ள துணை ஆட்சியா் மற்றும் சாா்பு கோட்ட நீதிபதி அலுவலகத்தில் ஜூலை 31 முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக. 20-ஆம் தேதி மாலைக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும். எனினும், தகுதியுடைய விண்ணப்பப் படிவங்களுக்கு மட்டுமே கடை நடத்த உரிமம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...