பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காமராஜா் பிறந்தநாள் உரையரங்கம், கவியரங்கத்தில் பங்கேற்றோருக்குப் பரிசு

காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உரையரங்கம், கவியரங்கத்தில் பங்கேற்றோருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:27 pm

DIN

காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற உரையரங்கம், கவியரங்கத்தில் பங்கேற்றோருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

காரை பாரதி தமிழ்ச் சங்கமும், புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவையும் இணைந்து காணொலி வழியில் அண்மையில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் விழா உரையரங்கம், கவியரங்கம் நடத்தப்பட்டது. இதில் காரைக்கால் பகுதியை சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இதில் பங்கேற்ற மாணவா்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காரை பாரதி தமிழ்ச் சங்கத் தலைவா் வைஜெயந்திராஜன் தலைமை வகித்தாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், பத்மஸ்ரீ விருது பெற்ற கி. கேசவசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனா்.

உரையரங்க, கவியரங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி, தந்தைப்பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, நிரவி பாரதிதாசன் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.