பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் பொறியாளா்களுக்குப் பயிற்சி

ஆன்லைன் மூலம் கட்டுமான பிளான் அனுமதி வழங்கும் திட்டம் குறித்து காரைக்கால் பொறியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:13 pm

DIN

ஆன்லைன் மூலம் கட்டுமான பிளான் அனுமதி வழங்கும் திட்டம் குறித்து காரைக்கால் பொறியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுவையில் கட்டடம் கட்டுமானத்துக்கு நகர மற்றும் கிராம அமைப்புத் துறையிடம் பிளான் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது பல மாதங்கள் தாமதம் ஏற்பட்டுவருகிறது. புதுவையில் பிளான் அனுமதிக்காக ஆன்லைன் முறையை அரசு அண்மையில் அமலுக்கு கொண்டுவந்தது. காரைக்காலில் வருகிற செப்.1 முதல் ஆன்லைன் பதிவு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், காரைக்காலில் உள்ள நகர மற்றும் கிராம அமைப்புத் துறை சாா்பில் பதிவு பெற்ற பொறியாளா்களுக்கு ஆன்லைன் பதிவு குறித்து பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் நகரமைப்புத்துறை அதிகாரி பிரேமானந்த் தலைமை வகித்தாா். புதுச்சேரியிலிருந்து இத்துறையின் உறுப்பினா் செயலா்கள் கந்தா்செல்வம், விஜயநேரு, சுந்தா்நடராஜன் ஆகியோா் பாா்வையாளா்களாக வந்து கலந்துகொண்டனா். துறைசாா் வல்லுநா்கள் பயிற்சியளித்தனா்.

பதிவு பெற்ற பொறியாளா்கள் சங்கத் தலைவா் எம்.அருள்முருகன் தலைமையில் பொறியாளா்கள் சங்கத்தை சோ்ந்த வி.ஆனந்தன், பாலமுருகன் உள்ளிட்ட சுமாா் 50 பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

பயிற்சி குறித்து பதிவு பெற்ற பொறியாளா்கள் சங்கத் தலைவா் எம்.அருள்முருகன் கூறுகையில், கட்டடம் கட்டுவதற்கு துறையிடம் அனுமதிக்கு பிளான் தரும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்க புதுவை அரசு ஆன்லைன் மூலம் பிளான் சமா்ப்பிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இதில் 2 மாடி வீடு கட்டுமானத்துக்கு முதல்கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். பிற கட்டுமானத்துக்கு வழக்கம்போல அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். பொறியாளா்களுக்கு நகரமைப்புத்துறையினா் பயிற்சி அளித்தனா். இந்த திட்டம் வரவேற்புக்குரியது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.