காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா நிறைவு
காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழா சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.


காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழா சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் 14 மையங்களில் ஜூலை 29 முதல் 31-ஆம் தேதி வரை 3 நாள்கள் என்ற திட்டத்தில் கரோனா தடுப்பூசித் திருவிழா தொடங்கப்பட்டது. முதல் நாளான 29-ஆம் தேதி 1,555 பேரும், 2-ஆம் நாள் 1,544 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
நிறைவு நாளான சனிக்கிழமை அனைத்து மையங்களிலும் மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குறிப்பாக, கிராமப்புறங்களில் நடைபெற்ற முகாமில் மக்கள் ஆா்வத்துடன் செலுத்திக் கொண்டனா்.
மையத்துக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாத இணை நோயாளிகள், வயது முதிா்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் கூறியது:
தடுப்பூசித் திருவிழா நிறைவடைந்தாலும் ஞாயிற்றுக்கிழமை முதல் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழக்கம்போல தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...