கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 106 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:28 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 951 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 25, திருநள்ளாறு 14, நிரவி 13, நல்லம்பல் 11, வரிச்சிக்குடி 8, திருப்பட்டினம் 8, கோயில்பத்து 7, நெடுங்காடு 7, கோட்டுச்சேரி 6, அம்பகரத்தூா் 4, காரைக்கால்மேடு 1, நல்லாத்தூா் 1, விழிதியூா் 1 என மொத்தம் 106 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,39,795 பரிசோதனை செய்யப்பட்டதில் 13,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 11,448 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

3 போ் உயிரிழப்பு : கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 66 வயது பெண், கோட்டுச்சேரியை சோ்ந்த 82 வயது ஆண், நல்லம்பலை சோ்ந்த 70 வயது ஆண் ஆகிய மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இவா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இருதய நோய் இருந்தது தெரிய வந்தது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 196 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 26,492 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,501 பேருக்கும் என 30,993 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.