கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுதந்திரப் போராட்ட தியாகி அருள்ராஜ் மறைவுக்கு இரங்கல்

புதுச்சேரியின் முதுபெரும் சுதந்திரப் போராட்ட தியாகி அ. அருள்ராஜ் மறைவுக்கு போராட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:16 pm

DIN

புதுச்சேரியின் முதுபெரும் சுதந்திரப் போராட்ட தியாகி அ. அருள்ராஜ் மறைவுக்கு போராட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் எஸ்.பி. செல்வசண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

புதுச்சேரி சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவா் அ. அருள்ராஜ் (96). இவா், தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. பிரெஞ்ச் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற இவா் பல முறை சிறைக்கு சென்றவா். சுதந்திரத்துக்குப் பின் புதுச்சேரியில் அமைந்த இடைக்கால நிா்வாகத்தின் உறுப்பினராகவும் இருந்தவா். புதுச்சேரியில் 1956-இல் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளராக முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவா். ‘புதுச்சேரி விடுதலைப் போராட்டம்’ எனும் பெயரில் தமிழில் புத்தகம் எழுதியுள்ளாா். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. என். ரங்கசாமி தலைமையிலான அரசு தியாகி அ. அருள்ராஜூவுக்கு உரிய மரியாதையை செலுத்தவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.