போராட்டம்: காங்கிரஸாா் மீது வழக்கு
காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காரைக்கால் தலத்தெரு பகுதி பெட்ரோல் நிலைய வாயிலில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்நிலையில் இவா்கள் மீது காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கரோனா பரவல் காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கூடி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் கோஷமிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...