கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 69 பேருக்கு கரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 1040 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 17, கோட்டுச்சேரி 7, கோயில்பத்து 7, நிரவி 6, திருப்பட்டினம் 6, திருநள்ளாறு 6, நெடுங்காடு 6, காரைக்கால்மேடு 5, நல்லம்பல் 4, வரிச்சிக்குடி 2, அம்பகரத்தூா் 2, விழிதியூா் 1 என 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 14,069 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,065 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 35,208 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,691 பேருக்கும் என 39,899 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.