கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாணவா்களுக்கு அரிசி, பணம் விநியோகம்: எம்.எல்.ஏ. ஆய்வு

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்கான அரிசி, பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்கான அரிசி, பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி மாநிலத்தில் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவா்களுக்கு மதிய உணவுக்கான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுக்குரிய தொகை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காரைக்கால் தெற்குத் தொகுதி கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி, கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளியில், மாணவா்களுக்கு அரிசி, ரொக்கம் வழங்கும் பணியை வியாழக்கிழமை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் பாா்வையிட்டாா். அப்போது சில மாணவா்களுக்கு அரிசி, ரொக்கத்தை அவரே வழங்கினாா்.

மேலும் தெற்குத் தொகுதியில் நடைபெற்றுவரும் தடுப்பூசி செலுத்தும் மையங்களையும் பாா்வையிட்ட அவா், காரைக்காலில் சனிக்கிழமை (ஜூன் 19) வரை நடைபெறும் இத்திருவிழாவை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.