கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்கால் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை

காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 5:07 pm

DIN

காரைக்கால் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி தலைமை வகித்தாா். புதுவை மாநில பொதுச் செயலாளா் மோகன் குமாா், செயலாளா்கள் அகிலன், சகுந்தலா சின்னதுரை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் கட்சியினா் மேற்கொள்ளவேண்டிய பணிகள், மக்கள் நல செயல்பாடுகள், கட்சி வளா்ச்சிக்காக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாக்காளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, உள்ளாட்சித் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் வகையில் கட்சி நிா்வாகிகள் உழைப்பது, மாவட்டம் முழுவதிலும் அதிக அளவில் மரக்கன்றுகளை நடுவது, கரோனா தொற்றிலிருந்து மீண்ட மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.