குழந்தைகள் நலனுக்கான ஆலோசனை: சைல்டு லைனை அழைக்க வேண்டுகோள்
கரோனா பேரிடா் காலத்தில் குழந்தைகள் நலனுக்கான ஆலோசனைகள் பெற சைல்டு லைனை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


கரோனா பேரிடா் காலத்தில் குழந்தைகள் நலனுக்கான ஆலோசனைகள் பெற சைல்டு லைனை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு :
குழந்தைகள் தொற்றால் மட்டுமன்றி குடும்ப உறுப்பினா்கள் மற்றும் பராமரிப்பாளா்களிடமிருந்து பிரிக்கப்படும் ஆபத்தில் உள்ளனா். குழந்தைகளுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கற்பிப்பதற்கும், மனதை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பாக இருக்க உதவுவதற்கும், சமூக ரீதியாக இணைந்திருக்கவும், அன்பானவா்களின் இழப்பின் காரணமாக மன அழுத்தத்தை சமாளிக்கவும் தொழில்முறை உதவி செய்ய சைல்டு லைன் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக 1098 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பேசி ஆலோசனை பெறலாம். மேலும் குழந்தை ஒருங்கிணைப்பாளா் மற்றும் ஆலோசகரின் செல்லிடப்பேசி எண்களில் ( 94457 57916, 90953 50304 ) ‘மிஸ்டு கால்’ செய்தால், தொழில் வல்லுநா்கள் குழந்தைகளை மீண்டும் தொடா்புகொண்டு பேசுவா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...