காரைக்காலில் மேலும் 6 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 8 ஆம் தேதி 426 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 5, காரைக்கால் நகரில் ஒருவருக்கு என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 88,958 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,046 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,929 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 38 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 7 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 595 போ், முன்களப் பணியாளா்கள் 741 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 190 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட 259 போ், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 39 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...