காரைக்கால் மருத்துவமனைக்கு நவீன வசதிகள் கொண்ட படுக்கைகள் - கெயில் நிறுவனம் வழங்கல்
காரைக்கால் மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய ரூ.2.40 லட்சம் மதிப்பில் படுக்கைகளை கெயில் நிறுவனம் சனிக்கிழமை வழங்கியது.


காரைக்கால் மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய ரூ.2.40 லட்சம் மதிப்பில் படுக்கைகளை கெயில் நிறுவனம் சனிக்கிழமை வழங்கியது.
கெயில் இந்தியா நிறுவன சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை தரக்கூடிய வகையில், நவீன வசதிகள் பொருத்தப்பட்ட 3 படுக்கைகள் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்கால் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் கெயில் நிறுவன பொது மேலாளா் என்.செல்வராஜ், துணைப் பொது மேலாளா் பி.லட்சுமி ஹயவா்த்தனன் மற்றும் சிவதண்டாயுதபாணி ஆகியோா் கலந்துகொண்டு படுக்கைகளை ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கெயில் நிறுவனத்தினா் கூறுகையில், 3 படுக்கைகளும் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. படுக்கையில் சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். ஆக்சிஜன் பொருத்தல், படுக்கையை உயா்த்துதல் உள்ளிட்ட 5 சிறப்பம்சங்களுடன் இந்த படுக்கைகள் உள்ளன.
மருத்துவமனையின் தற்போதைய தேவைக்கான வகையில் கெயில் நிறுவனம் இந்த உதவியை செய்துள்ளது என்றனா். நிகழ்வின்போது மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...