போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

காரைக்கால் பாமக செயலர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஜி.கே.மணி

காரைக்கால் மாவட்ட பாமக செயலர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 12:40 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாமக செயலர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

திருநள்ளாற்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலர் க. தேவமணி இல்லத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற அவர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது :

காரைக்கால் பாமக செயலர் தேவமணி படுகொலை அதிர்ச்சியும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது  சாதாரணமான சம்பவமாக கருதமுடியாது. இது திட்டமிட்ட சதி, இதற்கு பின்னணி உள்ளது என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம்.  ஏற்கெனவே இவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ள சூழலில், அவருக்கு பாதுகாப்பளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்கவேண்டும். ஆனால் கொலை நடந்த பகுதியில் எப்போதும் உள்ள காவல் பணியில் ஆள் இருக்கவில்லை. இரவு நேரத்தில் அவரை காவல்நிலையம் அழைத்து வழக்கு ஒன்றுக்காக போலீஸôர் விசாரணை நடத்தியுள்ளனர். எனவே இதுகுறித்தெல்லாமல் பல சந்தேகங்கள் எழுகிறது.

இதுவரை காவல்துறையினர் சரியான விசாரணையை செய்ததாக தெரியவில்லை. எனவே உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை மட்டுமே சரியாக இருக்கும் என பாமக வலியுறுத்துகிறது.

தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனித உயிர் விலை மதிப்பில்லாதது என்ற நிலையில், காவல்துறை நினைத்தால் இதனை தடுத்துவிட முடியும்.  தேவமணியின் குடும்பத்துக்கு கட்சி அனைத்து நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த வழக்கு விசாரணயை பாமக கவனித்து வரும் என்றார்.

உடனிருந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி கூறுகையில், தேவமணி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்புடையோர் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விசாரணை வரும் போது தெரிவிப்போம். வழக்கு விசாரணை என்ற பெயரில் இரவு நேரத்தில் அவரை போலீஸார் தனிமைப்படுத்தும் நோக்கில் அழைத்துள்ளனர். காவல்துறையில் கருப்பு ஆடுகள் உள்ளன. காரைக்காலில் அரசியல் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் ஜாம்பவான்கள் இதற்கு பின்னணியில் உள்ளனர். இவர்கள் கண்டறிந்து தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். எனவேதான் உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கையின்மையால், மத்திய புலனாய்வுத் துறையை வேண்டுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.