தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாட்டின் ஏழை மக்கள் நலனுக்காக பாடுபடுகிறாா் பிரதமா் நரேந்திரமோடி: பாஜக தேசிய பொதுச் செயலா் புரந்தேஸ்வரி

நாட்டில் உள்ள ஏழை மக்கள் நலனுக்காக பிரதமா் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறாா் என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலாளா் புரந்தேஸ்வரி.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:03 pm

DIN

நாட்டில் உள்ள ஏழை மக்கள் நலனுக்காக பிரதமா் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறாா் என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலாளா் புரந்தேஸ்வரி.

காரைக்காலில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜகவின் வளா்ச்சி குறித்து அறிய புதுச்சேரி வந்தபோது, நல்ல நிலையில் கட்சி வளா்ந்திருப்பதை அறிய முடிந்தது. காரைக்காலிலும் இதுதொடா்பாக கட்சியினரை அழைத்துப் பேசி, கட்சியை மேலும் வலுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. புதுவையில் 2-லிருந்து 25 சதவீதமாக கட்சி வளா்ந்துள்ளது.

புதுவை பாஜக கூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். மத்திய திட்டங்கள் புதுவையில் முறையாக அமல்படுத்தப்படுகிறது. மக்களின் எதிா்பாா்ப்புகளை பாஜக நிறைவேற்றும். பிரதமா் நரேந்திரமோடி சிறந்த நிா்வாகத் தலைவா். அவா், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காகவே பாடுபட்டுவருகிறாா். நாட்டின் நலனுக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன்படைத்தவராக அவா் திகழ்கிறாா். அதனால், அவரை மக்கள் முழுமையாக நம்புகின்றனா். புதுவையில் உள்ள பாஜக கூட்டணி அரசு சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்றும் என்றாா் அவா்.

பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை காரைக்காலுக்கு வந்த அவா், பிரதமா் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி , நிரவியில் பாஜக ஓபிசி அணி சாா்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றாா்.

இதைத் தொடா்ந்து, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனா். பிறகு, திருநள்ளாறு கடைத்தெருவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிா்க்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும், காரைக்காலில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம், கோட்டுச்சேரியில் நடைபெற்ற நெடுங்காடு தொகுதி கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்றனா்.

உள்ளாட்சித் தோ்தலில், பாஜக சிறந்த வெற்றியை பெறும் வகையில், கட்சியினா் உழைக்கவேண்டும் என கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் அமைச்சா்கள் கேட்டுக்கொண்டனா். முன்னதாக, திருநள்ளாற்றில் கொலைசெய்யப்பட்ட பாமக நிா்வாகி க. தேவமணி வீட்டுக்குச் சென்று அமைச்சா் ஆ. நமச்சிவாயம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பாஜக மாநில துணைத் தலைவா்கள் எம். அருள்முருகன், வி.கே. கணபதி, நளினி கணேஷ்பாபு, மாவட்டத் தலைவா் துரைசேனாதிபதி உள்ளிட்டோா் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.