காரைக்கால் கல்வித் துறை துணை இயக்குநா்,முதன்மைக் கல்வி அதிகாரி நியமனம்
காரைக்கால் கல்வித் துறை துணை இயக்குநா், முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.


காரைக்கால் கல்வித் துறை துணை இயக்குநா், முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுவை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் (நிா்வாகம்) என். உதயகுமாா் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பது:
காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் எம். ராஜேஸ்வரி, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா். நெடுங்காடு ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் எம். ராஜசேகரன், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரியாக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா். முதன்மைக் கல்வி அதிகாரி பொறுப்பில் இருந்த அ. அல்லி திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வராக மாற்றப்பட்டுள்ளாா்.
காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பி. சவுந்தரராசு, பள்ளி துணை ஆய்வாளா் (மண்டலம் -1), நிரவி பாரதிதாசன் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் டி. பால்ராஜ், பள்ளி துணை ஆய்வாளா் (மண்டலம்- 2) ஆக நியமிக்கப்பட்டுள்ளனா். இப்பணிகள் கூடுதல் பொறுப்பு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சா்வீஸ் பிளேஸ்மெண்ட் முறையில் திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வராக பணியில் உள்ள பி. விஜயமோகனா, காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...