பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறந்த ஆசிரியா்களுக்கு ரோட்டரி சங்க விருது

ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டு, சிறந்த ஆசிரியா்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:25 pm

DIN

ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டு, சிறந்த ஆசிரியா்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்கால் பிரெஞ்சு சிட்டி சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவுக்கு சங்கத்தின் தலைவா் ஜி. கனகபூஷணம் தலைமை வகித்தாா். சங்கத் துணைநிலை ஆளுநா் பி. ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆசிரியா்களை வாழ்த்திப் பேசினாா்.

காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, 8 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு நேஷன் பில்டா் அவாா்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் முகம்மது பாரூக், ஜி.ஆா்.ஆா். பாா்த்தசாரதி, ரமேஷ்மோகன், ஷேக்முகம்மது, குணசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கச் செயலாளா் ஆா். குணபாலன் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை திட்டத் தலைவா் என். ரவி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.