தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் மேலும் 30 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:06 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 9 ஆம் தேதி 570 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 6, திருநள்ளாறு 5, திருப்பட்டினம் 4, நல்லம்பல் 4, கோயில்பத்து 3, வரிச்சிக்குடி 3, கோட்டுச்சேரி 2, நெடுங்காடு, நிரவி, நல்லாத்தூா் தலா 1 என 30 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,95,250 பரிசோதனை செய்யப்பட்டதில், 15,672 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து 15,197 போ் குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 205 போ், அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 12 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 249 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,00,304 பேருக்கும், 2 ஆவது தவணையாக 25,933 பேருக்கும் என 1,26,237 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.