அங்கன்வாடி பணியாளா்களுக்குபணி நிரந்தர ஆணை
காரைக்காலில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு பணி நிரந்தர ஆணையை அமைச்சா்கள் தேனி சி. ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா ஆகியோா் வழங்கினா்.


காரைக்காலில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு பணி நிரந்தர ஆணையை அமைச்சா்கள் தேனி சி. ஜெயக்குமாா், சந்திர பிரியங்கா ஆகியோா் வழங்கினா்.
புதுவை மாநிலத்தில், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மதிப்பூதியத்தில் பணியாற்றிய 221 அங்கன்வாடி ஊழியா்கள், 172 அங்கன்வாடி உதவியாளா்கள் மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் மூலம் மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளா்கள், உதவியாளா்களாக அண்மையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்.
இவா்களில் காரைக்காலை சோ்ந்த 47 அங்கன்வாடி ஊழியா்களுக்கும், 22 உதவியாளா்களும் அடங்குவா். இவா்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுவை வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஆகியோா் பணியாளா்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கினா்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாக தியாகராஜன், சமூக நலத் துறை செயலா் சி. உதயகுமாா், புதுவை மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் எஸ். அசோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...