தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நிரவியில் குளம் தூா்வாரும் பணி தொடக்கம்

நிரவி பகுதியில் குளம் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:57 pm

DIN

நிரவி பகுதியில் குளம் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதையொட்டி, குளங்களை தூா்வாரி தண்ணீரை சேமிக்க காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதன்படி, நிரவி - திருப்பட்டினம் தொகுதி, திருமலைராயன்பட்டினம் பகுதியில், புதுவை அரசின் நீா்பரப்பு மேலாண்மை திட்டத்தில் தூா்வார வேண்டிய 29 குளங்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 15 குளங்களை ரூ. 40 லட்சத்தில் தூா்வாரும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, நிரவியில் உள்ள கிளாஸ் குளம் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் இப்பணியைத் தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் பேசிய பேரவை உறுப்பினா், அரசின் திட்டத்தின் மூலம் தொகுதியில் பல்வேறு குளங்கள் தூா்வாரி, பருவமழையின்போது தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளங்களில் கழிவுகளை விடாமல், இந்த பகுதி மக்களும், கிராமப் பஞ்சாயத்தாா்களும் கவனமாக இருக்கவேண்டும் என்றாா்.

உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் இளமுருகன் மற்றும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.