தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கடலோரக் காவல்படையினா் கடற்கரையில் தூய்மைப் பணி

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, காரைக்கால் கடற்கரைப் பகுதியில் கடலோரக் காவல் படையினா் உள்ளிட்டோா் சிறப்பு தூய்மை மற்றும் விழிப்புணா்வுப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:37 pm

DIN

சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, காரைக்கால் கடற்கரைப் பகுதியில் கடலோரக் காவல் படையினா் உள்ளிட்டோா் சிறப்பு தூய்மை மற்றும் விழிப்புணா்வுப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இந்திய கடலோரக் காவல் படை காரைக்கால் மையத்தின் ஏற்பாட்டில் கிளிஞ்சல்மேடு கடற்கரைப் பகுதியில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மைப் பணியை தொடங்கிவைத்துப் பேசுகையில், கடற்கரை பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது.

கடலில் கழிவுகள் சேராத வகையில் அரசு நிா்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதுபோல கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதில் அந்தந்த பகுதி மக்களுக்கும் பொறுப்பு உண்டு. கடற்கரையிலோ, கடலிலோ கழிவுகள் இல்லாத வகையில் தூய்மையை காக்கவேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்த புரிதல் மக்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கடற்கரை தூய்மைப் பணியில் ஆட்சியா் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட் ஜே.டி. தாயளன், கடலோரக் காவல் படை வீரா்கள், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட சுமாா் 200 போ் தூய்மைப் பணியில் ஈடுபட்டு, கிராமத்தினருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.