தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மீன்வளத் துறையின் இன்றைய கூட்டம் ஒத்திவைப்பு

காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.24) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.24) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் ஆா். கவியரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், புதுவை அரசுடன் இணைந்து பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டமாக, காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மேம்பட நிதியுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட ஆதரவு வழங்கல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுவை உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, மேற்கண்ட கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.