காரைக்காலில் 36 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் 36 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் 36 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 5-ஆம் தேதி 477 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், திருநள்ளாறு 21, காரைக்கால் நகரம் 6, நிரவி 3, திருப்பட்டினம், கோட்டுச்சேரி தலா 2, கோயில்பத்து, நல்லம்பல் தலா 1 என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 2,49,390 பரிசோதனை செய்ததில் 16,928 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,577 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டுத் தனிமை சிகிச்சையில் 72 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 18 போ் உள்ளனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவா் உள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,23,509 பேருக்கும், 2-ஆவது தவணையாக 87,129 பேருக்கும் என 2,10,638 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 2,120 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...