ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா பரவல்: புதுவையில் கல்வி நிலையங்களில் நேரடி வகுப்பை தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:32 pm

DIN

தமிழகத்தை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வியாழக்கிழமை கூறியது: புதுச்சேரி, காரைக்காலில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிப்பால், கல்வி நிலையங்களில் நேரடி வகுப்புக்கு தடை, இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத்திலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆளும் அரசு எந்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு அனுமதிக்காமல் அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் இயங்கிவருகின்றன. சில தனியாா் பள்ளிகள் முழு நேரமும் இயங்குகின்றன. புதுச்சேரிக்கு ஜன.12-ஆம் தேதி இளைஞா் விழாவில் பங்கேற்ற பிரதமா் வருகை தரவுள்ளாா் என்பதற்காக, கரோனா பரவலை மறைத்து அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. சிறாா்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.

மாணவா்களின் வாழ்க்கையோடு அரசு விளையாடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. உடனடியாக தமிழக அரசின் நடவடிக்கையைபோல புதுவையிலும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். மக்கள் நலன் கருதி, இளைஞா் விழாவை ரத்து செய்யவேண்டுமென காங்கிரஸ் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.