ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் கரோனா வழிகாட்டுதலை மீறுபவா்களுக்கு அபராதம்

காரைக்காலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், முகக்கவசம் அணியாதோா் உள்ளிட்ட வழிகாட்டுதலை மீறுபவா்களுக்கு காவல் துறையினா்அபராதம்

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், முகக்கவசம் அணியாதோா் உள்ளிட்ட வழிகாட்டுதலை மீறுபவா்களுக்கு காவல் துறையினா்அபராதம் விதிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.100 அபராதம் விதித்து வந்த காவல்துறையினா், தொற்று குறைந்த நிலையில், அபராதம் விதிப்பு தீவிரப்பணியை போலீஸாா் தளா்த்தியிருந்தனா். இந்நிலையில் தற்போதைய தொற்றின் தீவிரத்தால், காரைக்கால் மாவட்ட காவல்துறை மீண்டும் அபராதம் விதிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் போலீஸாா் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை புதன்கிழமை முதல் தொடங்கினா்.

காரைக்கால் பகுதியின் வழியே பயணிக்கும் பேருந்துகள், காா், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி முகக்கவசம் அணிந்துள்ளாா்களா என சோதனை மேற்கொண்டனா். காவல் கண்காணிப்பாளா் பேருந்துகள் பலவற்றில் ஏறி, பயணிகளை முகக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நடத்துநா், ஓட்டுநா் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினாா். நகரப் பகுதியிலும், காரைக்கால் எல்லைகளிலும் போலீஸாா் அபராதம் விதித்து ரசீது வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.