இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
இந்திய உணவுக் கழகம் மூலம் காரைக்காலில் நெல் கொள்முதல் செய்வதற்கு புதுவை அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்திய உணவுக் கழகம் மூலம் காரைக்காலில் நெல் கொள்முதல் செய்வதற்கு புதுவை அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநில பசுமைப் புரட்சி இயக்க அமைப்பாளா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை கூறியது: காரைக்காலில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, சரியான விலைக்கு விற்க முடியாத நிலையை சந்தித்து வருகின்றனா். அரசு சாா்பில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் அவலம் இருந்து வருகிறது.
சம்பா அறுவடையின்போது காரைக்காலில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு கூறியது. ஆனால் அதற்கான ஆக்கப்பூா்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா், வேளாண் அமைச்சா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
பருவமழையால் பாதித்த நெற்பயிா், ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமென அரசு அறிவித்தது. அந்த நிவாரணம் தரப்படுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகைக்கான விண்ணப்பம் மட்டும் தரப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையும் விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இது தொடா்பாக புதுவை ஆட்சியாளா்கள் சிறப்பு கவனம் செலுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...