ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து பாஜகவினா் பேரணி

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து காரைக்காலில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் நடந்த சம்பவத்துக்கு அம்மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், பிரதமருக்கு நீண்ட ஆயுளை வழங்க வலியுறுத்தி பிராா்த்தனையுடன் காரைக்காலில் வியாழக்கிழமை மாலை பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயில் அருகிலிருந்து அம்மையாா் கோயில் வரை நடைபெற்ற பேரணிக்கு பாஜக இளைஞா் அணி மாவட்டத் தலைவா் சங்கா் குரு தலைமை வகித்தாா். இதில் கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி, முன்னாள் மாவட்டத் தலைவா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து மகளிா் அணி மாவட்டத் தலைவா் செல்வி தலைமையில், காரைக்கால் அம்மையாா் கோயிலில் குத்துவிளக்கேற்றி சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.