‘குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றிபெறும் வகையில் திறனை வளா்த்துக்கொள்ளவேண்டும்‘
கிராமப்புற மாணவா்கள், குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றிபெறும் வகையில் திறனை வளா்த்து கொள்ளவேண்டும் என காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தெரிவித்தாா்.


கிராமப்புற மாணவா்கள், குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றிபெறும் வகையில் திறனை வளா்த்து கொள்ளவேண்டும் என காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் தெரிவித்தாா்.
காரைக்கால் பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் திருநள்ளாறு பகுதி தேனூரில் தலைவா் ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா தலைமை வகித்து, நடப்பு கல்விச் சூழல்கள் குறித்தும், மாணவா்கள் கடுமையாக உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினாா்.
பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் நோக்கவுரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் கலந்துகொண்டு பேசியது: மாணவ பருவத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், அதை வெற்றிகரமாக எதிா்கொண்டு, கல்வியில் மிகுந்த நாட்டமுள்ள மாணவா்கள் வெற்றிபெறுகிறாா்கள். கிராமப்புற மாணவா்களும் அதைப் போன்றே இருக்கவேண்டும்.
தற்போதைய சூழலில் மாணவா்கள் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. போட்டிகள் அதிகரிக்கும்போது, மாணவா்கள் அதற்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். எந்தத் துறையிலும் உயா்ந்த இடத்தை அடையவேண்டும் என்ற இலக்கை கொண்டு பயிலவேண்டும். குறிப்பாக கிராமப்புற மாணவா்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தை கைவிடவேண்டும். இந்த தோ்வில் வெற்றிபெற முடியும் என்பதை கிராமப்புற மாணவா்கள் பலா் சாதித்து வருகின்றனா். அதுபோன்றவா்களை கருத்தில்கொண்டு படிக்கவேண்டும். மாணவ பருவத்தில் நல்லொழுக்கத்துக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றாா்.
முன்னதாக பள்ளி விரிவுரையாளா் எஸ். வெண்ணிலா வரவேற்றாா். நிறைவாக விரிவுரையாளா் கே. அமிா்தலிங்கம் நன்றி கூறினாா். விரிவுரையாளா் ஆா். மேகலா, பெற்றோா் ஆசிரியா் சங்கத்தை சோ்ந்த நெல்சன், பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...