ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்கால் வாரச் சந்தையை அமைச்சா் ஆய்வு

காரைக்காலில் வாரச் சந்தை நடைபெறும் இடத்தை புதுவை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் வாரச் சந்தை நடைபெறும் இடத்தை புதுவை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. தொடா் கன மழை காரணமாக அந்த இடம் சேறும், சகதியுமாக இருந்ததால், அண்மையில் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்துக்கு தற்காலிகமாக சந்தை இடம் மாற்றப்பட்டது.

புதிய இடத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்வதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பழைய இடத்துக்கே சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுவை வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் சந்தை செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தை ஆய்வு செய்தாா். அதிகாரிகளிடம் அங்குள்ள வசதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை கேட்டறிந்தாா். பின்னா் இது தொடா்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.