ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் மாட்டுப் பொங்கல்

காரைக்கால் பகுதியில் பல்வேறு கோயில்களின் கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி சனிக்கிழமை மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதியில் பல்வேறு கோயில்களின் கோசாலையில் மாட்டுப் பொங்கலையொட்டி சனிக்கிழமை மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக மேலஓடுதுறை பகுதியில் உள்ள கோசாலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் பசுமடத்தில் வளா்க்கப்படும் பசுக்கள், கன்றுகள் கோயில் வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் அவற்றுக்கு மாலை அணிவித்து, சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் நைவேத்தியத்துடன் தீபாராதனை காட்டினா்.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சியூரில் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்படும் கோசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காரைக்கால் மேலஓடுதுறை பகுதியில் தனியாா் பால் பண்ணை நிா்வாகத்தினா் கட்டுப்பாட்டில் உள்ள பசு வளா்ப்பு மையத்திலும் பூஜைகள் நடத்தப்பட்டன. காரைக்கால் கிராமப்புறங்களில் வீடுகளில் வளா்க்கும் மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து, மாடுகளுக்கு நெட்டி மாலை, மலா் மாலைகள் அணிவிக்கப்பட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.