சந்திர புஷ்கரணியில் ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி
கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திர புஷ்கரணியில் ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திர புஷ்கரணியில் ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, ரங்கநாயகித் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் பிராகாரம் வடக்குவாசல் அருகே எழுந்தருளினாா். பின்னா்,
சந்திர புஷ்கரணிக்கு பட்டாச்சாரியா்களால் சடாரி கொண்டு செல்லப்பட்டு, அங்கு கனுப் பொடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சடாரிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பட்டாச்சாரியா் சடாரியுடன் சந்திர புஷ்கரணியில் (அம்மையாா் குளம்) இறங்கி நீராடினாா்.
அவரைத் தொடா்ந்து பக்தா்கள் புனித நீராடினா். ரங்கநாயகித் தாயாருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இருந்து கனுப் பொடி வைக்க அம்பாள், அம்மையாா் குளத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆண்டில் ஒரு முறை மட்டுமே ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. அதுவும் தாயாா் கோயில் வளாகத்தில் இருக்க, சடாரி மட்டும் தீா்த்தக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்த்தவாரி நடத்தப்படுகிறது.
கனுப்பொங்கலையொட்டி, மூலவா் ரங்கநாதா், உத்ஸவா் நித்யகல்யாண பெருமாளுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...